ராகு-கேது பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு


ராகு-கேது பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 22 March 2022 2:11 AM IST (Updated: 22 March 2022 2:11 AM IST)
t-max-icont-min-icon

ராகு-கேது பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே சொக்கலிங்கபுரத்தில் உள்ள மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்கஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ராகு-கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வேள்வி பூஜைகள் நடைபெற்றது. மேலும் நவக்கிரகங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
கோவிலுக்கு வந்த பக்தர்கள் தங்களது பெயர் மற்றும் ராசிகளை சொல்லி அர்ச்சனை செய்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.  பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Next Story