கோவில் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
கோவில் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
அலங்காநல்லூர்
மதுரை அருகே பாலமேட்டில் உள்ள பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோவில்களில் பங்குனி பொங்கல் திருவிழா நடந்தது. கோவிலில் கொடியேற்றமும் நடந்ததும் நேர்த்தி கடன் இருக்கும் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். பின்னர் மங்கள இசை முழங்க முளைப்பாரி தண்ணீர் செம்பு ஊர்வலம் வந்து கும்மி அடித்து அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அம்மனுக்கு வண்ணமலர்கள் அலங்காரம் செய்து அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சக்தி கரகம் எடுக்கப்பட்டது. அன்று இரவு வாண வேடிக்கையுடன் பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இந்த திருவிழாவில் பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம், மாவிளக்கு கரும்பு தொட்டில், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடன்களை மேளதாளம் முழங்க இரண்டு கோவில்களிலும் ஆயிரக்கணக்கானோர் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும், வெளி மாவட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story