மார்த்தாண்டம் அருகே செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல்;டிரைவர் கைது


மார்த்தாண்டம் அருகே செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல்;டிரைவர் கைது
x
தினத்தந்தி 22 March 2022 2:45 AM IST (Updated: 22 March 2022 2:45 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே செம்மண் கடத்திய டெம்போவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குழித்துறை, 
மார்த்தாண்டம் அருகே செம்மண் கடத்திய டெம்போவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
டெம்போ பறிமுதல்
மார்த்தாண்டம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெத்தின பாண்டியன் தலைமையிலான போலீசார் மார்த்தாண்டம் அருகே உள்ள வட்டவிளையில் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ஒரு டெம்போவை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால், டிரைவர் நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்று சிறிது தூரத்தில் டெம்போவை நிறுத்தி விட்டு தப்பியோட முயன்றார். உடனே, போலீசார் துரிதமாக செயல்பட்டு டிரைவரை மடக்கிப் பிடித்தனர். டெம்போவை சோதனை செய்தபோது அதில் செம்மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் டெம்போவை பறிமுதல் செய்து டிரைவரான மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரங்கோடு நுள்ளிவிளையை சேர்ந்த ஜாண் ஜெயராஜ் (வயது 25) என்பவரை கைது செய்தனர். 

Next Story