ரஷிய தாக்குதலில் உயிரிழந்த ‘நவீன், இந்தியாவின் மகன்-பிரதமர் மோடி உருக்கம்
ரஷிய தாக்குதலில் உயிரிழந்த ‘நவீன், இந்தியாவின் மகன்’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார்
பெங்களூரு: உக்ரைனில், ரஷியாவின் ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்த கர்நாடக மருத்துவ மாணவர் நவீனின் உடல் நேற்று தாயகம் கொண்டுவரப்பட்டது. அவரது உடல் அவருடைய சொந்த ஊரான ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா சலகேரி கிராமத்திற்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது வீட்டில் இறுதிச்சடங்கு நடந்தது. பின்னர் அவரது உடல் தாவணகெரேயில் உள்ள சாமனூர் சிவசங்கரப்பா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கப்பட்டது.
முன்னதாக நவீன் இறந்த செய்தி கேட்டதும் பிரதமர் நரேந்திர மோடி நவீனின் தந்தை சேகரப்பாவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது,‘நவீன் உங்களுக்கு மட்டும் மகன் அல்ல. அவர் ‘இந்தியாவின் மகன்’ என்று உருக்கமாக கூறினாராம். நவீனின் உடலை பார்த்து கதறி அழுத சேகரப்பா தற்போது நிருபர்களிடம் இந்த தகவலை பகிர்ந்து கொண்டார்.
Related Tags :
Next Story