நஞ்சுண்டேஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
சென்னிமலை அருகே உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னிமலை
சென்னிமலை அருகே உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு பூஜை
சென்னிமலை அருகே ஊத்துக்குளி ரோட்டில் உள்ளது நஞ்சுண்டேஸ்வரர் கோவில். பங்குனி மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் மட்டும் இந்த கோவிலில் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி பங்குனி மாதத்தின் முதல் திங்கட்கிழமையான நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு நஞ்சுண்டேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஈரோடு மட்டுமின்றி திருப்பூர், கோவை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு கோவில் வளாகத்தில் குவிந்தனர்.
பக்தர்கள் தரிசனம்
நேற்று முதல் வார திங்கட்கிழமை என்பதால் சுமார் ½ கி.மீ. தூரத்துக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நஞ்சுண்டேஸ்வரரை தரிசனம் செய்தனர். திரளான பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனாக பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள பழனி ஆண்டவருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நஞ்சுண்டாபுரம் ஊர் பொதுமக்கள் மற்றும் ஊத்துக்குளி கைத்தமலை முருகன் கோவில் பணியாளர்கள் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். பக்தர்களின் வசதிக்காக சென்னிமலை, ஊத்துக்குளி ஆகிய ஊர்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
Related Tags :
Next Story