சேலம் வழியாக செல்லும் லோக்மான்யதிலக்- கோவை ரெயில் இயக்கத்தில் மாற்றம்


சேலம் வழியாக செல்லும் லோக்மான்யதிலக்- கோவை ரெயில் இயக்கத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 22 March 2022 3:50 AM IST (Updated: 22 March 2022 3:50 AM IST)
t-max-icont-min-icon

சேலம் வழியாக செல்லும் லோக்மான்யதிலக்- கோவை ரெயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

சூரமங்கலம்:
ஆந்திர மாநிலம் இந்துப்பூர் - பெனுகொண்டா ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாள பாதையில் பொறியியல் பணி நடைபெறுவதையொட்டி மும்பையில் இருந்து வரும் லோக்மான்ய திலக் - கோவை (வண்டி எண் 11013) எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் மறுமார்க்கத்தில் இயக்கப்படும் கோவை -லோக்மான்யதிலக் (வண்டி எண் 11014) ஆகிய ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. அதன்படி லோக்மான்யதிலக்- கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் 23,24,25,26,27,28,29 ஆகிய தேதிகளில் மாற்று வழிப்பாதையாக குண்டக்கல், கடப்பா, ரேணிகுண்டா, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, வழியாக கோவை சென்றடையும், இந்த ரெயில் அனந்தபூர், தர்மாவரம், சத்தியசாய் பிரசாந்தி நிலையம், பெங்களூரு, ஓசூர் மற்றும் தர்மபுரி வழியாக இயக்கப்படாது.
இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் கோவை- லோக்மான்யதிலக் எக்ஸ்பிரஸ் இன்று மற்றும் 23,24,25,26,27,28,29 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா, கட்டப்பா, குண்டக்கல் வழியாக மும்பை லோக்மான்ய திலக் ரெயில் நிலையம் சென்றடையும், இந்த ரெயில் தர்மபுரி, ஓசூர், பெங்களூரு, தர்மாவரம் வழியில் மேற்கண்ட தேதிகளில் இயக்கப்படாது. 
இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story