சேலம் வழியாக சென்ற ரெயிலில் பெண்களிடம் சில்மிஷம் செய்த நபர் சிக்கினார்


சேலம் வழியாக சென்ற ரெயிலில் பெண்களிடம் சில்மிஷம் செய்த நபர் சிக்கினார்
x
தினத்தந்தி 22 March 2022 4:02 AM IST (Updated: 22 March 2022 4:02 AM IST)
t-max-icont-min-icon

சேலம் வழியாக சென்ற ரெயிலில் பெண்களிடம் சில்மிஷம் செய்த நபர் சிக்கினார்.

சூரமங்கலம்:
நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 17236) ெரயில் நாமக்கல் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எஸ்-3 பெட்டியில் பயணித்த பெண்களிடம் வாலிபர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பெட்டியில் பயணம் செய்த பெண்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து சக பயணிகள் அவரை பிடித்து ரோந்து பணியில் இருந்த ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே ரெயில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ரெயில்வே போலீசார் உடனடியாக அவரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 38) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story