வாரச்சந்தை வளாகத்தில் குவிந்து கிடக்கும் குப்பை


வாரச்சந்தை வளாகத்தில்  குவிந்து கிடக்கும் குப்பை
x
தினத்தந்தி 22 March 2022 5:03 PM IST (Updated: 22 March 2022 5:03 PM IST)
t-max-icont-min-icon

வாரச்சந்தை வளாகத்தில் குவிந்து கிடக்கும் குப்பை

உடுமலை ராஜேந்திரா சாலையில் நகராட்சி வாரச்சந்தை உள்ளது. இந்த வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடந்து வருகிறது. அத்துடன் இந்த வாரச்சந்தை வளாகத்தின் ஒரு பகுதியில் தினசரி காய்கறி சந்தையும், அதையொட்டி தினசரி காய்கறி கமிஷன் மண்டிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த வாரச்சந்தை, தினசரி சந்தை மற்றும் காய்கறிகமிஷன் மண்டிகளில் சேகரமாகும் காய்கறி கழிவுகள் ஆகியவை வாரச்சந்தை வளாகத்தின் தெற்குபகுதியில் கொட்டப்பட்டு வருகின்றன.
அதனால் அந்த இடத்தில் காய்கறி கழிவுகள் குவிந்து கிடக்கிறது. அத்துடன் அந்த இடத்தில் கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. அதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. ஆனால் நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் குவிந்துகிடக்கும் மண்குவியல் மற்றும் காய்கறிகழிவுகள் அகற்றப்படாமலும், தேங்கி நிற்கும் கழிவுநீர் அகற்றப்படாமலும் உள்ளது.
அந்த இடத்தை சுத்தம் செய்யவேண்டும், காய்கறி கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என்பதே, இந்த சந்தைக்கு வரும் பொதுமக்களின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Next Story