மறுமுத்திரையிடாத தராசுகள், எடைக்கற்கள் பறிமுதல்
திருவண்ணாமலையில் மறுமுத்திரையிடாத தராசுகள், எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தலைமையில் துணை ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் உதவி ஆய்வாளர்கள் திருவண்ணாமலை நகரத்தில் தேரடி வீதி, ஜோதி பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது எடையளவு சட்டத்தின் கீழ் மறுமுத்திரையிடாமல் பயன்பாட்டில் வைத்திருந்த 25 மின்னணு தராசுகள், 5 மேசை தராசுகள், 3 அளவைகள் மற்றும் 19 எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளர்கள் மீது சட்டமுறை எடையளவு சட்டம் 2009-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுகுறித்து உதவி ஆணையர் மீனாட்சி கூறுகையில், ‘‘எடையளவு சட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
வணிகர்கள், தங்கள் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் எடையளவுகளை உரிய காலத்திற்குள் மறுமுத்திரையிட்டு மறுபரிசீலனை சான்றுகளை நிறுவனங்களில் நன்கு தெரியும்படி வைக்க வேண்டும்.
மீறினால் மறுமுத்திரையிடாமல் பயன்பாட்டில் உள்ள தராசுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்’’ என்றார்.
Related Tags :
Next Story