ஆறுமுகமங்கலம் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா


ஆறுமுகமங்கலம் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
x
தினத்தந்தி 22 March 2022 5:46 PM IST (Updated: 22 March 2022 5:46 PM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகமங்கலம் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது

ஏரல்:
ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோவிலில் பங்குனி சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு காலையில் மகா கணபதி ஹோமத்துடன் வழிபாடு தொடங்கியது. தொடர்ந்து கலச பூஜை, மூலவர் மற்றும் உற்சவர் அபிஷேகம் மற்றும் உச்சிகால தீபாராதனை நடந்தது. மாலையில் சிறப்பு அலங்கார தீபாராதனை,  சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரபல சினிமா பின்னணி பாடகர்  சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story