தக்காளியை டிராக்டர் மூலம் அழித்த விவசாயி


தக்காளியை டிராக்டர் மூலம் அழித்த விவசாயி
x
தினத்தந்தி 22 March 2022 6:36 PM IST (Updated: 22 March 2022 6:36 PM IST)
t-max-icont-min-icon

தக்காளியை டிராக்டர் மூலம் அழித்த விவசாயி

பல்லடம் அருகே, தக்காளி விலை வீழ்ச்சியால், பயிரிடப்பட்ட தக்காளியை டிராக்டர் மூலம் அழித்த விவசாயி
பல்லடம், பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர்களில் தக்காளி பயிரிடப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தக்காளி விலை உயர்ந்து 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானதால், விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி மேற்கொண்டனர். கடந்த கார்த்திகை மாதத்தில் விதைக்கப்பட்ட தக்காளிகள் விளைந்து தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி வருகையால், தேவைக்கு அதிகமான உற்பத்தி ஏற்பட்டு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.இதனால் தக்காளிகளை விளை நிலத்திலேயே டிராக்டர்கள் மூலம் தக்காளி செடிகளை அழித்து வருகின்றனர்.இதற்கிடையே பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி காளிநாதம் பாளையம் ஓட்ட வளவு தோட்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார், விவசாயி இந்த நிலையில் இவரது தோட்டத்தில் 4 ஏக்கரில் தக்காளி பயிரிட்டு இருந்தார். இந்நிலையில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால், தக்காளி செடிகளை டிராக்டர் மூலம் அழித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது.பரம்பரையாக விவசாயம் செய்து வருகிறோம்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளிக்கு நல்ல விலைக்கு விற்பனையானதால் தக்காளி பயிர் சாகுபடி செய்தோம்.கார்த்திகை பட்டத்தில் விதைத்த தக்காளிகள் விளைந்து தற்போது அறுவடை செய்யப்படுகிறது.இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவு தக்காளி வருகையால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது 14 கிலோ தக்காளி கொண்ட பெட்டி ரூ.30க்கு விற்பனையாகிறது இதனால் தக்காளி பறிப்பதற்கான ஆட்கள் கூலி மற்றும் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதற்கான வாகன வாடகை உள்ளிட்டவை கட்டுப்படி ஆகவில்லை. இந்தமுறை
தக்காளி விவசாயத்தில் உற்பத்தி செலவைக் கூட திரும்ப எடுக்க முடியாமல் போனது. இதனால் தக்காளிகளை விவசாய நிலத்திலேயே டிராக்டர்கள் மூலம் தக்காளி செடிகளை அழித்து வருகிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story