கொத்தடிமை குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனை


கொத்தடிமை குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனை
x
தினத்தந்தி 22 March 2022 7:21 PM IST (Updated: 22 March 2022 7:21 PM IST)
t-max-icont-min-icon

கொத்தடிமை குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனை

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கம் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கலெக்டர் வினீத் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறும்போது, ‘கடந்த பிப்ரவரி மாதம் 9ந் தேதி முதல் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கொத்தடிமை தொழிலாளர்கள் முறையை ஒழிப்போம், தனிநபர் சுதந்திரம் காப்போம், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒரு கடுமையான மனித உரிமை குற்றம். கொத்தடிமை தொழிலாளர் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
தான் வாங்கிய கடனுக்காகவோ, முன் பணத்திற்காகவோ அல்லது சமூக கடமைகளுக்காகவோ, விருப்பப்பட்ட இடத்திற்கு செல்லும் உரிமை இழப்பு, விருப்பப்பட்ட வேலை செய்யும் சுதந்திரம், தான் உற்பத்தி செய்த பொருட்களை சந்தை நிலவரப்படி விற்பனை செய்யும் உரிமை இழப்பு, உடல்சார்ந்த வன்முறைக்கு உட்படுத்துதல் இருந்தால் 1800 4252650 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். குறைந்தபட்சம் ஊதியம் வழங்காமல் கொத்தடிமை குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்’ என்றார்.
இதில் உதவி கலெக்டர்  அப்டாப் ரசூல், தொழிலாளர் உதவி ஆணையாளர் மலர்கொடி, தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story