புதுவையில் 16 16 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது


புதுவையில் 16 16 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது
x
தினத்தந்தி 22 March 2022 7:34 PM IST (Updated: 22 March 2022 7:34 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் 16.16 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 463 பேருக்கு கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டது. அவர்களில் ஒருவருக்குக்கூட தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. தொடர்ந்து 2-வது நாளாக புதிய பாதிப்புகள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 11 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 2 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று முதல் தவணை தடுப்பூசியை 1,368 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,673 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 115 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 16 ஆயிரத்து 148 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story