ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி


ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
x
தினத்தந்தி 22 March 2022 8:24 PM IST (Updated: 22 March 2022 8:24 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் பரிதாபமாக பலியானார்

கோவில்பட்டி:
கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் அருகில் ரெயில்வே தண்டவாள பகுதியில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் காயங்களுடன் கிடந்தார். அப்பகுதியில் உள்ளவர்கள். வாலிபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை சோதனை செய்த டாக்டர், வாலிபர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன், ஏட்டு அருண்குமார் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், அவர் சங்கரன் கோவில் அருகே உள்ள மீன்துள்ளி கிராமத்தை சேர்ந்த ஆவுடையப்பன் மகன் சூரியா (வயது 19) என்றும்,  மலையங்குளம் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கோவில்பட்டியிலுள்ள நண்பரை பார்க்க வந்தவர் தண்ட வாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு படுகாயம் அடைந்து இறந்துள்ளதாக கூறப் படுகிறது. ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story