நீலகிரியில் ரூ 4712 கோடி கடன் வழங்க இலக்கு கலெக்டர் அம்ரித் தகவல்


நீலகிரியில் ரூ 4712 கோடி கடன் வழங்க இலக்கு கலெக்டர் அம்ரித் தகவல்
x
தினத்தந்தி 22 March 2022 9:38 PM IST (Updated: 22 March 2022 9:38 PM IST)
t-max-icont-min-icon

2022-23-ம் ஆண்டில் நீலகிரியில் ரூ.4,712 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

ஊட்டி

2022-23-ம் ஆண்டில் நீலகிரியில் ரூ.4,712 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

ரூ.4,712 கோடி 

நீலகிரி மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், 2022-23-ம் ஆண்டிற்கு கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி ஊட்டி பிங்கர்போஸ்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் எஸ்.பி.அம்ரித் தலைமை தாங்கி கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.
 
பின்னர் இது குறித்து கலெக்டர் எஸ்.பி.அம்ரித் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டிற்கு ரூ.4,712.12 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் கல்வி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன்கள், அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் கடன்களை பெற வங்கிகள் உறுதி செய்ய வேண்டும். 

கடன் வழங்க நடவடிக்கை

அரசு மானியம் பெறும் திட்டங்கள் அனைவரையும் சென்றடைய வங்கிகள் உறுதியுடன் செயல்பட வேண்டும். தொழில் உதவி கடன்கள், கல்விக்கடன், தெருவோர வியாபாரிகளுக்கு கடன் உதவிகள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைந்து கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 9 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்து 665 மதிப்பில் மானியத்துடன் கடன் உதவி வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்யராஜா, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலாராவ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story