பி.டி.ஏ. இடைத்தரகர்கள் 9 பேரின் வீடுகளில் ஊழல் தடுப்பு படை சோதனை
பெங்களூருவில் பி.டி.ஏ. இடைத்தரகர்கள் 9 பேரின் வீடுகளில் நேற்று ஊழல் தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது தங்கநகைகள், ஆவணங்கள் சிக்கின.
பெங்களூரு:
பெங்களூருவில் பி.டி.ஏ. இடைத்தரகர்கள் 9 பேரின் வீடுகளில் நேற்று ஊழல் தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது தங்கநகைகள், ஆவணங்கள் சிக்கின.
பி.டி.ஏ.வில் முறைகேடு
பெங்களூரு வயாலிகாவல் பகுதியில் பெங்களூரு வளர்ச்சி ஆணைய (பி.டி.ஏ.) தலைமை அலுவலகம் உள்ளது. இந்த பெங்களூரு வளர்ச்சி ஆணையம் சார்பில் வளர்ச்சி பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவது, புதிய லே-அவுட்டுகளை அமைப்பது, வீடு கட்டி கொடுப்பது உள்பட பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பி.டி.ஏ. அதிகாரிகள் மீது ஏராளமான முறைகேடு புகார்கள் எழுந்தன.
இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரு வளர்ச்சி ஆணைய தலைமை அலுவலகத்தில் மற்றும் 4 இடங்களில் உள்ள மண்டல அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர். அப்போது ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை ஊழல் தடுப்பு படையினர் கைப்பற்றி எடுத்து சென்றனர். இந்த முறைகேடு தொடர்பாக சிலர் மீது ஊழல் தடுப்பு படையினர் வழக்குப்பதிவு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 இடைத்தரகர்கள் வீடுகளில் சோதனை
இந்த நிலையில் பி.டி.ஏ. அதிகாரிகள், பி.டி.ஏ. இடைத்தரகர்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ஊழல் தடுப்பு படையினர் விசாரித்து வந்தனர். மேலும் 150-க்கும் மேற்பட்ட இடைத்தரகர்களின் பட்டியலையும் ஊழல் தடுப்பு படையினர் சேகரித்து வைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று காலை பி.டி.ஏ.வில் இடைத்தரகர்களாக உள்ள 9 பேர் வீடுகளில் ஊழல் தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அதாவது பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் வசித்து வரும் ரகு, ஆர்.டி.நகரில் உள்ள மனோராயனபாளையாவில் வசித்து வரும் மோகன்குமார், டொம்லூரை சேர்ந்த மனோஜ், மல்லத்தஹள்ளியில் உள்ள கெங்குட்டேயில் வசித்து வரும் முனிரத்னா, ஆர்.ஆர்.நகரில் வசிக்கும் தேஜஸ்வி, கே.ஜி.சர்க்கிள் முத்தினபாளையாவில் வசித்து வரும் அஸ்வத், சிக்கஅனுமய்யா, சாமுண்டேஸ்வரி நகரை சேர்ந்த ராமு, லட்சுமண் ஆகிய 9 பேரின் வீடுகளில் நேற்று ஒரே நேரத்தில் ஊழல் தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
ஊழல் தடுப்பு படை உதவி போலீஸ் கமிஷனர் உமா பிரசாத் தலைமையில் நடந்த இந்த சோதனையில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். நேற்று காலை 6 மணி முதல் இந்த சோதனை நடந்தது.
4½ கிலோ தங்க நகைகள் சிக்கியது
இந்த சோதனையின் போது மேற்கண்ட 9 பேரின் வீடுகளில் இருந்தும் முக்கிய ஆவணங்களை ஊழல் தடுப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் 9 பேரின் பெயர்களில் உள்ள சொத்துகள், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயர்களில் உள்ள சொத்துகள், வங்கிக்கணக்கு, பணபரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களையும் அதிகாரிகள் சரிபார்த்தனர்.
இந்த சோதனையின் போது மோகன்குமார் வீட்டில் இருந்து 4½ கிலோ தங்கநகைகள், 13 கிலோ வெள்ளி நகைகள் சிக்கின. மனோஜின் வீட்டில் இருந்து 22 விலை உயர்ந்த கைக்கெடிகாரங்கள், 19 விலை உயர்ந்த கண் கண்ணாடிகள் சிக்கின. தேஜஸ்வி வீட்டில் இருந்து கட்டு, கட்டாக பணம், தங்கநகைகள், வெள்ளி பொருட்கள் சிக்கின. நகைகள், விலை உயர்ந்த பொருட்களை ஊழல் தடுப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அஸ்வத் வீட்டில் 4 விலை உயர்ந்த கார்கள் நின்றதையும் கண்டுபிடித்தனர். நேற்று மாலை வரை இந்த சோதனை நீடித்தது.
ஆட்டோமொபைல் கடை நடத்திய மோகன்
ஊழல் தடுப்பு படை சோதனையின் போது இடைத்தரகர் மோகன் என்பவர் வீட்டில் இருந்து 4½ கிலோ தங்கநகைகள், 13 கிலோ வெள்ளி நகைகள் சிக்கி உள்ளது. மோகன், ஆட்டோமொபைல் கடை நடத்தி வந்தது தெரியவந்தது. மிளகு பால் வியாபாரியான அவர், பெங்களூரு புறநகர் பகுதியை சேர்ந்தவர். பி.டி.ஏ. அதிகாரி ஒருவருக்கு கார் டிரைவராக பணியாற்றிய மோகன் பின்னர் இடைத்தரகராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சொகுசு ஓட்டல் போல் வீடு கட்டிய முனிரத்னா
பெங்களூரு மல்லத்தஹள்ளியில் உள்ள இடைத்தரகர் முனிரத்னா வீட்டிலும் இன்று ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது முனிரத்னாவின் வீட்டின் உள்பகுதியை கண்டு அதிகாரிகள் வாயடைத்து நின்றனர். அதாவது சொகுசு ஓட்டலில் இருப்பது போல் உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், சிறிய திரையரங்கு உள்ளிட்ட வசதிகள் அந்த வீட்டில் இருந்தது. முனிரத்னா வீட்டில் இருந்து சொத்து ஆவணங்கள், தங்கநகைகள், விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதுபோல் அவர் காருக்குள் மறைத்து வைத்திருந்த வங்கிக்கணக்கு புத்தகங்களையும் அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றனர்.
சிக்க அனுமய்யாவின் பெயரில் 20 வீட்டு மனைகள்
பெங்களூரு மல்லத்தஹள்ளியில் உள்ள இடைத்தரகர் முனிரத்னா வீட்டிலும் இன்று ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது முனிரத்னாவின் வீட்டின் உள்பகுதியை கண்டு அதிகாரிகள் வாயடைத்து நின்றனர். அதாவது சொகுசு ஓட்டலில் இருப்பது போல் உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், சிறிய திரையரங்கு உள்ளிட்ட வசதிகள் அந்த வீட்டில் இருந்தது. முனிரத்னா வீட்டில் இருந்து சொத்து ஆவணங்கள், தங்கநகைகள், விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதுபோல் அவர் காருக்குள் மறைத்து வைத்திருந்த வங்கிக்கணக்கு புத்தகங்களையும் அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றனர்.
ஜெராக்ஸ் கடை நடத்திய தேஜஸ்வி
பி.டி.ஏ. ஒப்பந்ததாரர் தேஜஸ்வி பி.யூ.சி. மட்டுமே படித்து உள்ளார். ஆரம்பத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்த அவர் பின்னர் ஒப்பந்ததாரராக மாறி உள்ளார். தற்போது அவர் கோடிக்கணக்கில் சொத்துகளை குவித்து வைத்து உள்ளார். அவர் தற்போது வசித்து வரும் ஆர்.ஆர்.நகரில் உள்ள பங்களா, தமிழகத்தை சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மகளிடம் இருந்து விலைக்கு வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story