தலைஞாயிறு பேரூராட்சி அலுவலகத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா


தலைஞாயிறு பேரூராட்சி அலுவலகத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா
x
தினத்தந்தி 22 March 2022 10:09 PM IST (Updated: 22 March 2022 10:09 PM IST)
t-max-icont-min-icon

தற்காலிக பணியாளரை நீக்கியதை கண்டித்து தலைஞாயிறு பேரூராட்சி அலுவலகத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாய்மேடு:
 தலைஞாயிறு பேரூராட்சியில்  தற்காலிக குடிநீர் திட்ட பணியாளராக கருணாநிதி என்பவர் உள்பட 2 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென கருணாநிதியை பேரூராட்சி நிர்வாகத்தினர் பணி நீக்கம் செய்தனர். இதனை கண்டித்து தி.மு.க. கவுன்சிலர்கள் 7 பேர் பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், பேரூராட்சி செயல் அலுவலர் குகன் பேச்சுவார்த்தை நடத்தி  தற்காலிக பணியாளர் கருணாநிதியை மீண்டும் பணியில் சேர்க்கப்படுவார் என உறுதியளித்தார்.இதை தொடர்ந்து தி.மு.க.கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Next Story