ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தர்ணா


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தர்ணா
x
தினத்தந்தி 22 March 2022 10:16 PM IST (Updated: 22 March 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம், 

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கேசவலு தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் சிவக்குமார், கோரிக்கை விளக்கவுரையாற்றினார். வேளாண்மைத்துறை அலுவலர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பார்த்திபன் நிறைவுரையாற்றினார். இதில் மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ், துணை செயலாளர் திருமாவளவன், மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் காஞ்சனா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலா உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தண்டபாணி நன்றி கூறினார்.

கோரிக்கைகள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியனின் தற்காலிக பணிநீக்க உத்தரவை ரத்து செய்து அவரை பணி ஓய்வில் செல்ல உரிய ஆணைகளை வழங்க வேண்டும், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல் மற்றும் மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் கிராம ஊராட்சி செயலாளர்களுககும் வழங்கி உரிய அரசாணை வெளியிட வேண்டும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட கணினி உதவியாளர்களுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையின்படி இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதிய நிர்ணயம் செய்து பணி வரன்முறை செய்தல் வேண்டும், முழு சுகாதார திட்ட வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

Next Story