கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி


கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 22 March 2022 10:29 PM IST (Updated: 22 March 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட காவல்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை சார்பில் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் மோகன் கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். 
இதில் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று, சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து கையில் பதாகைகளை ஏந்தியபடி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நேருஜி சாலை, திரு.வி.க. வீதி, விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் பேரணியாக சென்றனர். அப்போது பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. 

Next Story