மகேந்திரமங்கலம் அருகே பிளஸ்1 மாணவிக்கு பாலியல் தொல்லை இருதரப்பினர் மோதல் 3 பேர் கைது


மகேந்திரமங்கலம் அருகே பிளஸ்1 மாணவிக்கு பாலியல் தொல்லை  இருதரப்பினர் மோதல் 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 March 2022 10:31 PM IST (Updated: 22 March 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

மகேந்திரமங்கலம் அருகே பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது இருதரப்பினர் மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த 17-ந் தேதி மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த முனிராஜ் (வயது 28) என்பவர் அங்கு சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாயார் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் தனது மகன்களுடன் வந்து முனிராஜை கண்டித்துள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருதரப்பிலும் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story