தர்மபுரியில் விஷம் குடித்த என்ஜினீயர் சாவு


தர்மபுரியில் விஷம் குடித்த என்ஜினீயர் சாவு
x
தினத்தந்தி 22 March 2022 10:31 PM IST (Updated: 22 March 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் விஷம் குடித்த என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.

தர்மபுரி:
தர்மபுரி ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் சபரி (வயது 26). என்ஜினீயரான இவர் அரசு பணிக்கான போட்டி தேர்வுகளை எழுதி வந்தார். இந்த நிலையில் வீட்டில் தொடர்ந்து வாந்தி எடுத்து கொண்டிருந்த அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது சபரி விஷம் குடித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story