சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தால் விபத்தை தடுக்க முடியும்
சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்டால் விபத்தை தடுக்க முடியும் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற சட்டக்கல்லூரி கருத்தரங்கில் கலெக்டர் மோகன் பேசினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட போக்குவரத்துத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் அரசு சட்டக்கல்லூரியில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி, பேசியதாவது:-
விழுப்புரம் மாவட்டம் அதிக மாநில, தேசிய நெடுஞ்சாலைகளை கொண்டுள்ள மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டத்தில் பெரும்பாலான விபத்துகள் காலை 10 முதல் 12 மணிக்குள் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் பரபரப்பாக இயங்கும் காலகட்டத்தில் நாம் பயணிக்கிறோம்.
விபத்துகளை தடுக்க...
சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்டால் விபத்துகளை தடுக்க முடியும். இந்த மாவட்டத்தில் மாணவர்கள் பஸ்சின் படியில் நின்று பயணம் செய்வதை அதிகமாக பார்க்க முடிகிறது. படியில் பயணம் நொடியில் மரணம் என்பதை உணராமல் பயணிக்கின்றனர். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு பள்ளியிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 280 பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இ்ந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன், சிவக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, கல்லூரி முதல்வர் கயல்விழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story