செஞ்சி போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றம்
பனை ஏறும் தொழிலாளர்களிடம் பணம் வாங்கியதாக புகார் எழுந்ததால் செஞ்சி போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டாா்.
விழுப்புரம்,
செஞ்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பனைமர கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பனை ஏறும் தொழிலாளர்கள், முறையாக கள் இறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தற்போது கள்ளத்தனமாக கள் இறக்க மாதந்தோறும் செஞ்சி போலீசார், தங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தற்போது சாராய வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளது வேதனை அளிப்பதாக பனை ஏறும் தொழிலாளர்கள் சிலர் புகார் தெரிவித்து அந்த புகாரை வீடியோ மூலம் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இந்த புகார் சம்பந்தமாக செஞ்சி போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வரும் அறிவழகனை செஞ்சி போலீஸ் நிலையத்தில் இருந்து விழுப்புரம் ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்து நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, இந்த புகார் சம்பந்தமாக போலீஸ்காரர் அறிவழகனிடம் மேல்விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கூறினார்.
Related Tags :
Next Story