10 நிமிடத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டம்
விழுப்புரம் நகராட்சியில் 10 நிமிடத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் நகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழுக்காக விண்ணப்பித்து, அதனை பெறுவதற்கு மாதக்கணக்கில் பொதுமக்கள் அலக்கழிக்கப்பட்டுவந்தனர். இதனிடையே விண்ணப்பித்த 10 நிமிடங்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் வகையில் சிறப்பு திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஆணையர் சுரேந்திரஷா தலைமை தாங்கினார். நகரமன்ற துணைத்தலைவர் சித்திக்அலி முன்னிலை வகித்தார். நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் நகரமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story