ஆடு திருடனை கண்காணிப்பு கேமரா மூலம் பிடித்த பொதுமக்கள்
புஷ்பவனத்தில் ஆடு திருடனை கண்காணிப்பு கேமரா மூலம் பொதுமக்கள் பிடித்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் கடந்த ஓரு ஆண்டாக 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் தொடர்ந்து திருட்டுப் போயுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள், வேதாரண்யம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் புஷ்பவனத்தை சேர்ந்த முத்து கிருஷ்ணன் என்பவர் வளர்த்து வந்த ஆடு நேற்று திருட்டு போனது. இதுகுறித்து முத்துகிருஷ்ணன் குடும்பத்தினர் அந்த தெருவில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை பார்த்த போது ஒருவர் ஆட்டை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதை தொடர்ந்து கேமராவில் பதிவான நபர் யார் என்று விசாரணை நடத்தினர். இதில் அவர் அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் (வயது46) என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை பொதுமக்கள் பிடித்து வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், முத்துகிருஷ்ணன் வீட்டில் ஆடு திருடியதை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story