பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்


பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 22 March 2022 10:52 PM IST (Updated: 22 March 2022 10:52 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.

வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (இந்து) பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் தெட்சணமூர்த்தி வரவேற்றார் இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் ராஜமாணிக்கம், விமலா, தாசில்தார்  ரவிச்சந்திரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டனர் கூட்டத்தில்  கலெக்டர் அருண் தம்புராஜ் பேசுகையில், அரசு பள்ளி என்பது கடவுள் கொடுத்த வரம். பள்ளிக்கு செல்லும் தங்களது குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளோடு பெற்றோர் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 2 மணி நேரமாவது செலவிட வேண்டும் என்றார்.  கூட்டத்தில் சிறப்பாக கற்பித்த ஆசிரியை அனிதாவுக்கு புத்தகத்தை பரிசாக கலெக்டர் வழங்கினார்.

Next Story