வேலூர் அருகே வக்கீல் வீட்டில் 27 பவுன் நகை திருட்டு
வேலூர் அருகே வக்கீல் வீட்டில் 27 பவுன் நகை திருடிய நபர்ளை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர்
வேலூரை அடுத்த திருமலைக்கோடி நம்பிராஜபுரத்தை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன் (வயது 49), வக்கீல். இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்துக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். வீட்டின் பீரோவை திறந்து பார்த்தபோது 27 பவுன் நகை திருட்டு போயிருந்தது. வீட்டின் முன், பின்பக்க கதவின் பூட்டு, பீரோ உடைக்கப்படவில்லை. வீட்டு வேலை செய்யும் பெண் பீரோவை சாவி மூலம் திறந்து நகையை திருடியிருக்கலாம் என்ற சந்தேகம் செந்தமிழ்செல்வனுக்கு எழுந்தது.
இதுகுறித்து அவர் அரியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து வீட்டு வேலைக்காரியிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story