இ-சேவை மூலம் ‘தமிழரசு' மாத இதழுக்கு சந்தா செலுத்தும் வசதி


இ-சேவை மூலம் ‘தமிழரசு மாத இதழுக்கு சந்தா செலுத்தும் வசதி
x
தினத்தந்தி 22 March 2022 11:19 PM IST (Updated: 22 March 2022 11:19 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் இ-சேவை மூலம் ‘தமிழரசு' மாத இதழுக்கு சந்தா செலுத்தும் வசதி தொடங்கப்பட்டது.

மயிலாடுதுறை:
தமிழ்நாட்டில் உள்ள அரசின் இ-சேவை மையங்களில் தமிழக அரசின் மாதாந்திர இதழான ‘தமிழரசு’ மாத இதழிற்கு சந்தா தொகையினை செலுத்தலாம் என அரசு அறிவித்தது. அதை தொடர்ந்து மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தில் தமிழரசு மாத இதழுக்கு சந்தா தொகை செலுத்தும் சேவை தொடக்க நிகழ்ச்சி நடந்தது.இந்த வசதியை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்து சந்தா செலுத்தியவர்களுக்கு ஒப்புகை சீட்டினை வழங்கினார். மேலும் இ-சேவை மையத்தில் சந்தா செலுத்துதல் தொடர்பான விளம்பர பிரசுரத்தினை வெளியிட்டார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
தமிழக அரசின் இணைய சேவையான இ-சேவை மையங்களில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வெளியிடப்படும் தமிழரசு மாத இதழுக்கு சந்தா செலுத்தினால் இதழ் இல்லம் தேடி வரும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி ஆகிய தாசில்தார் அலுவலகங்களிலும், சீர்காழி நகராட்சி அலுவலகத்திலும் இ-சேவை மையங்களில் தமிழரசு மாத இதழுக்கு சந்தா செலுத்தும் சேவை தொடங்கப்பட்டுள்ளது என்றார். இதில் உதவி கலெக்டர் பாலாஜி, மயிலாடுதுறை தாசில்தார் ராகவன், அரசு வக்கீல்கள் தணிகைபழனி, அருள்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story