பொய்கை வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு வியாபாரம்
பொய்கை வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு வியாபாரம் நடைபெற்றது.
அணைக்கட்டு
வேலூர் மாவட்டம் பொய்கை ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை நடந்தது. வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் உயர்ரக கறவை மாடுகள், சினை மாடுகள் உள்ளிட்டவைகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். மாடுகளை வாங்க திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, சேலம், செய்யாறு, வந்தவாசி, சித்தூர், பலமனேர் மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.
ஒரு கறவை மாடு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை விற்பனையானது. சுமார் 700-க்கும் மேற்பட்ட காளை மாடுகள், சினை பசுக்கள், கறவை மாடுகள், ஆடுகள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டன. விவசாயிகள் பயிரிடும் காய் கறிகளும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து சந்தை நடத்தும் எலதாரர்களில் ஒருவரான வெங்கடேசன் கூறுகையில் பிப்ரவரி மாதத்தில் இருந்துதான் வாரச்சந்தை களைகட்டத் தொடங்கியுள்ளது என்றார்.. இந்த வாரம் ஒரு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
Related Tags :
Next Story