விவேகானந்தர் மண்டபத்திற்கு 4-வது நாளாக படகு போக்குவரத்து தாமதம்


விவேகானந்தர் மண்டபத்திற்கு 4-வது நாளாக படகு போக்குவரத்து தாமதம்
x
தினத்தந்தி 22 March 2022 11:46 PM IST (Updated: 22 March 2022 11:46 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்திற்கு 4-வது நாளாக படகு போக்குவரத்து தாமதம

கன்னியாகுமரி, 
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்து ரசித்து விட்டு திரும்புவது வழக்கம்.
இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது. 
நேற்று காலையில் விவேகானந்தர் மண்டபத்துக்கு ெசல்ல படகுத் துறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். அப்போது கடல் நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. அங்கு காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 
பின்னர் 11 மணிக்கு கடல் நீர் மட்டம் சீரானதைத் தொடர்ந்து படகு போக்குவரத்து தொடங்கியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை கண்டு ரசித்தனர். தொடர்ந்து 4-வது நாளாக படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story