ஊரக வளர்ச்சித்துறையினர் தர்ணா
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம்,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.மாவட்ட துணை தலைவர்கள் சிவனுபூவன், சுபாஷ், நித்தியானந்தம், ஊம்முல்ஜாமியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் விஜயகுமார் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் சோமசுந்தர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் கோபிநாத், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தர்ணா போராட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்கி அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்ட கணினி உதவியாளர்கள் அனைவருக்கும் இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள ஊரக வளர்ச்சி துறை மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. முடிவில், மாவட்ட துணை தலைவர் முனீஸ்பிரபு நன்றி கூறினார்.
Related Tags :
Next Story