அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்


அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 March 2022 11:48 PM IST (Updated: 22 March 2022 11:48 PM IST)
t-max-icont-min-icon

நூறு நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சீர்காழி:
நூறு நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம் 
சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் ராமன் தலைமை தாங்கினார். 
அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகள் பாஸ்கரன், சின்னதுரை, மீன்பிடி தொழிலாளர் சங்க மாநில செயலாளர் ஜீவானந்தம், இந்திய தேசிய காங்கிரஸ் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நீதிசோழன் வரவேற்றார். தொழிற்சங்க நிர்வாகிகள் ஈஸ்வரி, குழந்தைவேலு, அன்பழகன், திருவரசமூர்த்தி ஆகியோர் பேசினர்.
பொதுத்துறை நிறுவனங்களை விற்கக்கூடாது
தொழிலாளர்களுக்கு விரோதமாக 4 சட்ட தொகுப்புகளை மத்திய அரசு கைவிட வேண்டும். மின்சார சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும். எல்.ஐ.சி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை விற்கக்கூடாது. தேசிய பணமயமாக்கல் திட்டத்தை கைவிட வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.7500 நிவாரணம் வழங்க வேண்டும்.  
நூறு நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும். இந்த திட்டத்தை நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் விரிவுபடுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

Next Story