காளையார்கோவிலில் பரோல் அளிக்காததால் அதிகாரிகளை மிரட்ட சிறை மின்கம்பத்தில் ஏறிய கைதி சாவு

காளையார்கோவிலில் பரோல் அளிக்காததால் அதிகாரிகளை மிரட்ட சிறை மின்கம்பத்தில் ஏறிய கைதி சாவு
x
தினத்தந்தி 22 March 2022 11:48 PM IST (Updated: 22 March 2022 11:49 PM IST)
t-max-icont-min-icon

பரோல் அளிக்காததால் திறந்தவெளி சிறையில் ஆயுள் தண்டனை கைதி மின்கம்பத்தில் ஏறினார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காளையார்கோவில்,

ஆயுள் தண்டனை கைதி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 52). இவர் கடந்த 2018-ம் ஆண்டு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே புரசடி உடைப்பு திறந்தவெளி சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 4 ஆண்டுகளாக இவரை பார்க்க உறவினர்கள் யாரும் வராத நிலையில் மனஉளைச்சலில் இருந்த கருப்பசாமி, சிறை அதிகாரிகளிடம் பரோலில் வெளியே செல்ல அனுமதி கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் அனுமதி அளிக்காத நிலையில், அவர்களை மிரட்ட சிறை வளாகத்திற்குள் உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறியுள்ளார்.
மின்சாரம் தாக்கி பலி
 இதில் எதிர்பாராதவிதமாக கருப்பசாமி தலையில் மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக சிறைக்காவலர்கள் அவரை, காளையார்கோவில் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்பு மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸ் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story