வயலூர் முருகன் கோவிலில் வள்ளி திருக்கல்யாணம்

சோமரசம்பேட்டை, மார்ச். 23-
திருச்சி அருகே வயலூரில் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வள்ளி திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. முன்னதாக சுவாமியும், அம்பாளும் அலங்கரிக்கப்பட்டு திருக்கல்யாண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் காலை 10.30 மணிக்கு மேல் 11.30மணிக்குள் ரிஷப லக்கனத்தில் வள்ளி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இதையொட்டி சத்திரம் பஸ்நிலையத்தில் இருந்து வயலுருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மோகனசுந்தரம், செயல் அலுவலர் அருண் பாண்டியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story