புதுக்கோட்டையில் வேட்டை பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
வேட்டை பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வேட்டை பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்ற நிலையில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் கடந்த 18-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை 6-ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. அதன்பின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித நீர் அடங்கிய தீர்த்தக்குடங்கள் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டன. மேலும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் பக்தி பரவசத்தில் தரிசனம் செய்தனர். கோபுர கலசங்களில் ஊற்றப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story