தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 22 March 2022 11:59 PM IST (Updated: 22 March 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்துள்ள பொதுமக்களின் குறைகள் தொடர்பான செய்திகள் வருமாறு:-

சாய்ந்த மின்கம்பம்
மயிலாடுதுறை மாவட்டம் பண்டாரவாடை மாப்படுகையைசுற்றி அருண்மொழிதேவன் வரை உள்ள பகுதியில் வயல் வெளிகளில் மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இதனால் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் விவசாயிகள் விவசாய பணிகளில் ஈடுபட முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து சாய்ந்த மின் கம்பங்களை சீரமைத்து தர வேண்டும். 

                                                                                                                     -மயிலாடுதுறை, பொதுமக்கள்.

சாலை சீரமைக்கப்படுமா?

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவில் வாசலில் இருந்து காளி திருமங்கலம் இணைப்பு சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள்  சிரமப்படுகின்றனர். மேலும் மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது.. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தர வேண்டும்.

                                                                                                                           -பொதுமக்கள், திருமணஞ்சேரி.

Next Story