பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் ஊக்கத்தொகை பெற வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் ஊக்கத்தொகை பெற வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் 1 லட்சத்து 28 ஆயிரம் விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர். விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்த தேதியினை பொறுத்து 10 தவணை வரை தொகைகள் வர பெற்றுள்ளது. மத்திய அரசு தற்போது திட்ட நிதி வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதுவரை வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நிதி விடுவிப்பு செய்து வந்த நிலையில் இனி ஆதார் எண் அடிப்படையில் விடுவிக்கப்படும். தற்போது விவசாயிகள் 11-வது தவணை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைப்பது அவசியமாகும்.
ஆகவே தங்களது ஆதார் எண்ணை வங்கி எண்ணோடு இதுவரை இணைக்காத விவசாயிகள் உடனடியாக இணைத்துக் கொள்ள வேண்டும். ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள இ-சேவை மையங்களின் மூலம் பிரதம மந்திரி கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது விரல் ரேகை பதிவு செய்து விவரங்களை சரி பார்க்கலாம்.
இவ்வாறு கலெக்டர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story