பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசு
ராமநாதபுரத்தில் நடந்த தேசிய நுகர்வோர் தின விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசை கலெக்டர் வழங்கினார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் நடந்த தேசிய நுகர்வோர் தின விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசை கலெக்டர் வழங்கினார்.
நுகர்வோர் தின விழா
ராமநாதபுரம் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான தேசிய நுகர்வோர் தின விழா, உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமை தாங்கினார்.. மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன் வரவேற்று பேசினார். விழாவில், நுகர்வோர் தின போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகம்மது, மாநில நுகர்வோர் பாதுகாப்பு குழு உறுப்பினர் துரை சிங்கம் உள்ளிட்டோர் பேசினர். முடிவில், தனிதாசில்தார் முருகேசன் நன்றி கூறினார்.
850 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள்
இந்த நிகழ்ச்சியின்போது, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயகுமார் பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் கடந்த 3 மாதங்களில் 850 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உணவு பொருட்களில் கலப்படம் தொடர்பாக 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலம் புகார் தெரிவிக்கலாம். 24 அல்லது 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு பதில் அளிக்கப்படும் என்றார்.
இதில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து துறை சார்பில் உணவுப்பொருட்களில் கலப்படம் கண்டுபிடிப்பது குறித்து மாணவ, மாணவியருக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story