ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம்,
ஹிஜாப் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் அரசு பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முருகபூபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முகம்மது யாசின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் வருசை முஹம்மது, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் செய்யது இப்ராஹிம், பெரியார் பேரவை தலைவர் நாகேசுவரன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான முஸ்லிம் அமைப்பினரும் அனைத்து கட்சி அமைப்பினரும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story