காசநோய் குறித்த விழிப்புணர்வு மணல் சிற்பம்


காசநோய் குறித்த விழிப்புணர்வு மணல் சிற்பம்
x
தினத்தந்தி 23 March 2022 12:14 AM IST (Updated: 23 March 2022 12:14 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் காசநோய் குறித்த விழிப்புணர்வு மணல் சிற்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.

ராமேசுவரம், 

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் நேற்று காசநோய் தடுப்பு திட்டம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் காசநோய் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பரமக்குடியை சேர்ந்த ஆசிரியர் சரவணன் என்பவர் காசநோய் தடுப்பு விழிப்புணர்வு குறித்த மணல் சிற்பம் ஒன்றை அக்னி தீர்த்த கடற்கரையில் வடிவமைத்திருந்தார்.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நகரசபை தலைவர் நாசர்கான் இந்த மணல் சிற்பத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் நகரசபை துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் மெர்சி அன்னபூரணி மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதுபோல அக்னி தீர்த்த கடற்கரையில் காச நோய் விழிப்புணர்வுக்காக வடிவமைக்கப்பட்டிருந்த மன்னா சிற்பத்தை ஏராளமான பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் மிகுந்த ஆச்சரியத்தோடு நின்று வேடிக்கை பார்த்து செல்போனிலும் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

Next Story