வருவாய்த்துறையினருடன் தகராறு செய்த வாலிபர் கைது
ஆக்கிரமிப்பை அளவீடு செய்த போது வருவாய்த்துறையினருடன் தகராற செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி
தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தை அடுத்த பீமகுளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வீரராகவவலசை பகுதியில், உள்ள பீச்சான் ஏரியை அளக்கும் பணியில் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன், உதவியாளர்கள் விமலா, சுப்பிரமணி, நில அளவையர் முரளிவாணன் உள்ளிட்டோர் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது, ஏரியின் அருகே ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும், விளைநிலத்தை அளவிட முயன்றபோது, அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் (வயது 54) மற்றும் அவரது மகன் சிங்காரவேல் (35) ஆகியோர் வருவாய்த் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும், வருவாய் துறையினரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கிராம உதவியாளர்கள் விமலா மற்றும் சுப்பிரமணி உள்ளிட்டோரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் காவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவுசெய்து சிங்காரவேலை கைது செய்தனர். மாணிக்கத்தை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story