12 இடங்களில் நின்று செல்லும் நாகர்கோவில்-திருவனந்தபுரம் சிறப்பு ரெயில்
நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே 12 இடங்களில் நின்று செல்லும் சிறப்பு ரெயில் 1-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.
நாகர்கோவில்,
நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே 12 இடங்களில் நின்று செல்லும் சிறப்பு ரெயில் 1-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.
சிறப்பு ரெயில்
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து, ரெயில் போக்குவரத்து சில நாட்கள் ரத்து செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு ரெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலை இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி வழங்கி உள்ளது. அதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி முதல் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் இ்யக்கப்படுகிறது.
திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் (ரெயில் எண்: 06433) காலை 06.50 மணிக்கு புறப்படுகிறது.
12 இடங்களில் நின்று செல்லும்
இந்த ரெயில் நேமத்துக்கு 7 மணிக்கு வந்து 7.01-க்கும், பலராமபுரத்துக்கு 7.07 மணிக்கு வந்து 7.08-க்கும், நெய்யாற்றின்கரைக்கு 7.13 மணிக்கு வந்து 7.14-க்கும், அமரவிளாவுக்கு 7.17 மணிக்கு வந்து 7.18-க்கும், தனுவச்சபுரம் 7.21 மணிக்கு வந்து 7.22-க்கும், பாறசாலைக்கு 7.27மணிக்கு வந்து, 7.28-க்கும், குழித்துறை மேற்கு 7.33 மணிக்கு வந்து 7.34-க்கும், குழித்துறைக்கு 7.39 மணிக்கு வந்து 7.40-க்கும் பள்ளியாடிக்கு 7.48 மணிக்கு வந்து 7.49-க்கும், இரணியலுக்கு 7.59 மணிக்கு வந்து 8-க்கும், வீராணி ஆளூருக்கு 8.08-மணிக்கு வந்து 8.09-க்கும், நாகர்கோவில் டவுனுக்கு 8.14 மணிக்கு வந்து 8.15-க்கு புறப்பட்டு 8.45 மணிக்கு நாகர்கோவில் ஜங்ஷனை அடைகிறது.
இதே போல் நாகர்கோவில் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு சிறப்பு ரெயில் (ரெயில் எண்: 06428) புறப்படுகிறது. இந்த ரெயில் நாகர்கோவில் டவுனுக்கு 6.27 மணிக்கு வந்து 6.28-க்கும், வீராணி ஆளூருக்கு 6.33 மணிக்கு வந்து 6.34-க்கும், இரணியல் 6.40 மணிக்கு வந்து 6.41-க்கும், பள்ளியாடிக்கு 6.48 மணிக்கு வந்து 6.49-க்கும், குழித்துறைக்கு 6.56 மணிக்கு வந்து 6.57-க்கும், குழித்துறை மேற்கு இரவு 7.01 மணிக்கு வந்து 7.02-க்கும், பாறசாலைக்கு 7.08 மணிக்கு வந்து, 7.09-க்கும், தனுவச்சபுரம் 7.14 மணிக்கு வந்து 7.15-க்கும், அமரவிளாவுக்கு 7.19 மணிக்கு வந்து 7.20-க்கும், நெய்யாற்றின்கரைக்கு 7.25 மணிக்கு வந்து 7.26-க்கும், பலராமபுரம் 7.30 மணிக்கு வந்து 7.31-க்கும், நேமம் 7.44 மணிக்கு வந்து 7.45 மணிக்கு புறப்பட்டு 8.20 மணிக்கு திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையத்தை அடைகிறது.
இந்த ரெயிலில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 12 இடம் பெற்று இருக்கும்.
மேற்கண்ட தகவலை திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story