காரங்காடு அருகே மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
காரங்காடு அருகே மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
திங்கள்சந்தை,
காரங்காடு அருகே மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
காரங்காடு அருகே உள்ள நுள்ளிவிளை ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் சகாயராஜ் (வயது 50), மீன் வியாபாரி. இவரது மனைவி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால், மனவேதனையில் இருந்த சகாயராஜ் மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
வாழ்க்கையில் வெறுப்புற்ற அவர் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் சகாயராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story