அன்னதான உண்டியல் மூலம் ரூ.36 ஆயிரம் வசூல்


அன்னதான உண்டியல் மூலம் ரூ.36 ஆயிரம் வசூல்
x
தினத்தந்தி 23 March 2022 12:24 AM IST (Updated: 23 March 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.36 ஆயிரம் வசூல

சுசீந்திரம், 
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அவ்வாறு வருகின்ற பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கோவில் நிர்வாகம் கோவில் முன்பு அன்னதான உண்டியல் ஒன்று வைத்துள்ளது. இந்த உண்டியல் மாதந்தோறும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதுபோல் நேற்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. திருக்கோவில் கண்காணிப்பாளர் சிவக்குமார், ஆய்வர் ராமலட்சுமி, கோவில் மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் மூலம் ரூ.36 ஆயிரத்து 582 வசூலாகி இருந்தது.

Next Story