தரைப்பாலம் தடுப்புச்சுவரில் மோதிய சரக்கு வாகனம்


தரைப்பாலம் தடுப்புச்சுவரில் மோதிய சரக்கு வாகனம்
x
தினத்தந்தி 23 March 2022 12:25 AM IST (Updated: 23 March 2022 10:26 AM IST)
t-max-icont-min-icon

கொல்லிமலை அடிவாரத்தில் தரைப்பாலம் தடுப்பு சுவரில் மோதிய சரக்கு வாகனத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

சேந்தமங்கலம்:-

கொல்லிமலையில் உள்ள சர்க்கரைபட்டி கிராமத்தில் இருந்து காலியான கியாஸ் சிலிண்டர்களுடன் சரக்கு வாகனம் ஒன்று கொல்லிமலை அடிவாரத்துக்கு வந்து கொண்டிருந்தது. மலை சாலையில் உள்ள 1-வது கொண்டை ஊசி வளைவு அருகில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள தரைப்பாலம் தடுப்பு சுவரில் மோதியதுடன் பள்ளத்தில் பாதி பாய்ந்த நிலையில் தொங்கியது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு விபத்தில் சிக்கிய மினிலாரியை மீட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. லாரியை ஓட்டி வந்த சர்க்கரைபட்டி கிராமத்தை சேர்ந்த நெல்சன் பிரபு (வயது 26), அதே கிராமத்தை சேர்ந்த பிரேம்குமார் (20) இருவரும் காயமின்றி தப்பினர். கியாஸ் இல்லாத சிலிண்டர்கள் வேறு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story