பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்


பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 March 2022 12:25 AM IST (Updated: 23 March 2022 10:14 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாமக்கல்:-

நாமக்கல்லில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

பால் கொள்முதல் விலை

பசும்பால் ஒரு லிட்டர் ரூ.42, எருமைப்பால் ரூ.51 என கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் பால் மற்றும் பால்பவுடரை சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் ஆவின் நிர்வாக அலுவலகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் பூபதி தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் முனுசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்தின் போது ஆவின் பால் விற்பனை விலையை ரூ.3 வீதம் குறைத்ததால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய மாநில அரசு ரூ.300 கோடியை ஆவின் ஒன்றியங்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், மாவட்ட தலைவர் ஆதிநாராயணன், பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சதாசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story