தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கரூர்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும். தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பை ரத்து செய்திட வேண்டும். பொதுத்துறையை பாதுகாத்திட வேண்டும். முறைசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்வாரி சம்மேளனங்கள் சார்பில் 48 மணி நேரம் அகில இந்திய பொது வேலை நிறுத்த ஆயத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு எல்.பி.எப். மாவட்ட தலைவர் அண்ணாவேலு தலைமை தாங்கினார். இதில் எல்.பி.எப்., ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு., எச்.எம்.எஸ்., ஏ. ஐ.யு.டி.யு.சி., எம்..எல்.எப்., எல்.எல்.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story