பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்டவர் வெட்டிக் கொலை
கரூர் அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்டவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கரூர்
கரூர் மண்மங்கலம் பகுதிக்கு உட்பட்ட பெரியபள்ளிபாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தளவாய்பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்கிற பிரபு(வயது 40) அங்குள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று இரவு நடைபெற்ற கோவில் திருவிழா நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது பாஸ்கர் தரப்பினர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பிரபு தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த பாஸ்கர், பிரபுவை அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
போலீசார் குவிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பெரியபள்ளிபாளையம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருவிழாவில் நடைபெற்ற கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story