ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் தர்ணா


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் தர்ணா
x
தினத்தந்தி 23 March 2022 1:15 AM IST (Updated: 23 March 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர், 
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் ராஜகோபாலன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தினை அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் கண்ணன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். பல்வேறு அரசு அலுவலர் சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். இறுதியில் ஊரக வளர்ச்சித்துறையின் மாநில செயலாளர் புகழேந்தி நிறைவுரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் பாலகுரு நன்றி கூறினார்.

Next Story