வேளாண் பொருட்கள் ரூ.43 லட்சத்துக்கு ஏலம்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.43 லட்சத்துக்கு ஏலம் போனது.
நொய்யல்
நொய்யல் அருகே உள்ள சாலைப்புதூரில் அரசு ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளால் கொண்டு வரப்படும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் வாரந்தோறும் நடைபெறுகிறது. தரகர் இன்றி ஏலம் நடைபெறுவதால் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு க.பரமத்தி மற்றும் நொய்யல், வேட்டமங்கலம், புன்னம்சத்திரம், ஓலப்பாளையம், கொங்கு நகர், நடையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள், முகவர்கள் கலந்து கொண்டு வேளாண் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
ஏலம்
அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில் 27.19 குவிண்டால் கிலோ எடை கொண்ட 8 ஆயிரத்து 15 தேங்காய்கள் ஏலத்திற்கு வந்தன. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.32.65-க்கும், குறைந்தபட்சமாக ரூ.24.65-க்கும், சராசரி விலையாக ரூ.28.90-க்கும் என ரூ.81 ஆயிரத்து 445-க்கு ஏலம் போனது.
அதேபோல் 305.67 குவிண்டால் எடை கொண்ட 654 மூட்டை தேங்காய் பருப்பு ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.94.29-க்கும், குறைந்த விலையாக 92.29-க்கும், சராசரி விலையாக ரூ. 93.39-க்கும் ஏலம் கேட்கப்பட்டது. இரண்டாம் தரம் அதிகபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ 92.76-க்கும், குறைந்த விலையாக ரூ 85.15-க்கும், சராசரி விலை ரூ.91.29-க்கும் என ரூ.28 லட்சத்து 14 ஆயிரத்து 668-க்கு ஏலம் போனது.
எள்-கடலை
மேலும், கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.139.09-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.125.09-க்கும், சராசரி விலையாக 137.09-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.130.09-க்கும், குறைந்த விலையாக 127.09-க்கும், சராசரி விலையாக 127.09-க்கும் என ரூ.10 லட்சத்து 22 ஆயிரத்து 935-க்கு ஏலம் கேட்கப்பட்டது.
அதேபோல, நிலக்கடலை கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 70.05-க்கும், குறைந்த விலையாக 66.10-க்கும், சராசரியாக 68.50-க்கும் என ரூ.3 லட்சத்து 86 ஆயிரத்து 458 ஏலம் போனது. இந்த வாரம் நடந்த ஏலத்தில் தேங்காய், தேங்காய் பருப்புகள், நிலக்கடலை மற்றும் எள் ரூ.43 லட்சத்து 5ஆயிரத்து 506-க்கு விற்பனை ஆனது.
Related Tags :
Next Story